Current Information

Current Information in Tamil -1

  • உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக 2016 நவம்பரில்சன்வே டை ஹூலைட் தொடர்ந்து எட்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 93 பீட்டா பிளாப் வேகத்தில் செயல்படும் திறனுடைய இக்கணினியை அடுத்து அமெரிக்காவின் செகுயா மற்றும் டைட்டன் ஆகிய அதிவேகக் கணினிகள் அடுத்த இரு இடங்களைப் பிடித்துள்ளன.

 

  • பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கூ20 கிரிக்கெட் போட்டிகள் 2017 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12 வரை இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளன.

 

  • இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள ஆளில்லா உளவு விமானமான “ரஸ்டோம்-2” 2016 நவம்பர் 15 அன்று கர்நாடகத்திலுள்ள சித்திரதுர்கா மாவட்டத்தின் சல்லேகரே எனுமிடத்திலிருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது. இப்பரிசோதனை ரஸ்டோம்-2 வெற்றிகரமாக முடித்துள்ளது.

 

  • உலகிலேயே முதன்முறையாக ஸ்வீடன் நாட்டில் இ-குரொனா என்ற பெயரில் மெய்நிகர் பணம் (Virtual Money) வெளியிடப்பட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

  • இந்தியாவிற்கு அதிக அளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி ஈரான் முதலிடம் பிடித்துள்ளது.

 

  • ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நதிநீர் இணைப்புத்திட்டங்களையும் புதிதாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களையும் குறித்து பரிந்துரைகளை மேற்கொள்ள சிறப்புக்கமிட்டி ஒன்றை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

  • மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரகம் 2016 நவம்பரில் புதுடெல்லியில் நடத்தப்பட்ட சர்வதேச இந்திய வர்த்தக கண்காட்சி 2016-இல் (India International Trade Fair) சிறுபான்மையினத்தைச் சார்ந்த கலைஞர்கள் தயாரித்த கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கென திறன் குடில் (Hunar Hut – Skill Hut) அமைத்திருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *