General Knowledge Quiz Question Answers

General Knowledge – Quiz Question Answers – Part 1

  1. ஓடும் விமானத்தில் பிறக்கும் குழந்தை எந்த நாட்டின் பிரஜை ?

விமானம் எந்த நாட்டின் மீது பறக்கிறதோ அந்த நாட்டின் பிரஜை.

  1. பி.சி. ராய் விருது எதற்காக வழங்கப்படுகிறது ?

மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

  1. இந்தியா முதன்முதலில் எப்போது அணுகுண்டு பரிசோதனை நடத்தியது ?

1974-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி (ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் என்னும் இடத்தில்)

  1. அழியக் கூடிய நிலையில் உள்ள அரிய உயிரினங்களின் பெயர்களை தெரிவிக்கும்அதிகாரப்பூர்வ பட்டியல் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது ?

ரெட் டேட்டா புக் (சுநன Red Data Book). இது இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தினால் 1966-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

  1. மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் குயினைன் என்னும் மருந்து எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது ?

சின்கோனா என்னும் மரத்திலிருந்து கிடைக்கிறது.

  1. பெருங்காயம் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?

பெருலா என்னும் மரத்தின் பிசினிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

  1. எய்ட்ஸ் நோயைக் கண்டறிவதற்கு உதவும் இரண்டு பரிசோதனைகள் யாவை ?

வெஸ்டர்ன் பிளர்ட் மற்றும் எலிசா என்னும் பரிசோதனைகள்

  1. ஒரு அணுத்துகளுக்கு இந்திய அறிவியல் அறிஞர் ஒருவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தத் துகள் எது? அறிவியல் அறிஞர் யார் ?

துகள் : போஸான்.

அறிவியல் அறிஞர் : டாக்டர் சத்தியேந்திரநாத் போஸ்.

  1. இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி.வி. இராமனுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது ?

அவருடைய ஒளிச்சிதறல் கொள்கைக்காக வழங்கப்பட்டது.

  1. நாட்டிகல் மைல் என்பது என்ன ? அது எதற்கு பயன்படுகிறது ?

ஒரு நாட்டிகல் மைல் என்பது 1.85 கி.மீ. தூரத்தைக் குறிக்கும். கடலில் தூரத்தை அளக்க இது பயன்படுத்தப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *