General Info General News

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை : டெல்டா குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீரின் மூலம், 5.22 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. டெல்டாவில், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க, அணை நீர்மட்டம், 90 அடிக்கு மேல் இருக்க வேண்டும். நேற்று, 101.73 அடியாக இருந்தது.இதனால், எட்டு ஆண்டுகளுக்கு பின், குறித்தபடி ஜூன், 12ல், நேற்று குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணை நீர் திறப்பால், மொத்தம், 5.22 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். இதில், 3.25 லட்சம் ஏக்கரில், குறுவை சாகுபடி செய்யப்படும். குறுவை சாகுபடிக்கு, 90 நாட்கள் நீர் திறந்து விடப்படும். இதற்காக, 128 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படுகிறது.இதில் மேட்டூர் அணையிலிருந்து, ௧௦௦ டி.எம்.சி., தண்ணீரும், மீதமுள்ள நீரை, மழை நீர் மற்றும் நிலத்தடி நீர் மூலமாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வர்.கடந்த, 2019 – 20ல், டெல்டா கடைமடை வரை, தண்ணீர் செல்ல வசதியாக, 61 கோடி ரூபாயில் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. நடப்பாண்டும், 67.25 கோடி ரூபாய் ஒதுக்கி, துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு, 80 சதவீத பணி நிறைவடைந்துள்ளது.

இதனால், மேட்டூர் அணையில் திறக்கும் நீர், கடைமடை பகுதி விவசாயிகளின் சாகுபடிக்கு கிடைக்கும்.மேட்டூர் அணையில், மதகுகள் சீரமைப்புக்கு, 9 கோடி ரூபாய், 16 கண் மதகு பாலம் அருகே, தொங்கு பாலம் அமைக்க, 25 கோடி ரூபாய், 1 மெகாவாட் சோலார் மின்சாரம் தயாரிக்க, 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மேட்டூரில் திறக்கப்பட்ட நீர், 15ம் தேதி இரவு, தஞ்சை மாவட்டம், கல்லணைக்கு வரும். ”தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலுார் ஆகிய மாவட்டங்களின் பாசனத்திற்காக, கல்லணையில் இருந்து, 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்,” என, தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் நேற்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *