General Info

இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய திட்டம்.. கூகுள் அதிரடி முடிவு

ந்தியாவில் கூகுள் நிறுவனம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவதற்காக 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்த முதலீடானது படிப்படியான ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் படிப்படியாக இந்த முதலீட்டினை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொளி மூலமாக கலந்துரையாடினார். இது குறித்து வெளியான செய்தியில் இந்தியாவின் டிஜிட்டல் மயத்துக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலமாக இந்தியாவின் நான்கு முக்கியமான பகுதிகளில் இந்த முதலீடு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

எதற்காக முதலீடு?

சுகாதாரம், கல்வி வேளாண்மை ஆகிய சமூக நன்மைகளுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்த இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்றும் சுந்தர் தெரிவித்துள்ளார். நான்கு வருடங்களுக்கு முன்பாக மூன்றில் ஒரு பங்கு வர்த்தகம் தான் ஆன்லைன் இருப்பைக் கொண்டிருந்தது. ஆனால் இன்றோ 26 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர தொழில்களை கூகுள் தேடலில் ஈடுபடுவதை காண முடிகிறது. அதோடு கூகுள் வரைபடத்தில் ஒவ்வொரு மாதமும் 150 மில்லியன் பயனாளர்களின் பங்கை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *