Current Information General Info

ஜி-20 உச்சி மாநாடு G-20 Summit

ஜி-20 உச்சி மாநாடு

2020-ஆம் ஆண்டு சவூதி அரேபியா தலைமையில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. 21 மற்றும் 22 நவம்பர், 2020 ஆகிய தேதிகளில் நடந்த இந்த இரு நாள் மாநாட்டை சவூதி மன்னர் சல்மான்-பின்-அப்துல்-அஸீ°-அல்-சவூத் தொடக்கி வைத்தார். காணொலி முறையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களின் விவரம் :

குறைந்த விலையில் அனைவருக்கும் சமமான முறையில் கரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள சர்வதேச பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். கருப்புப் பணத்தடுப்பு, பயங்கரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் தொழில்நுட்பங்களையும், வசதிகளையும் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்.
G-20
20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் சேர்ந்த அமைப்பு. 19 நாடுகள் + ஐரோப்பிய ஒன்றியம்
நாடுகள்
ஆசியா கண்டத்தில் 8 நாடுகள். வடஅமெரிக்கா – 3 நாடுகள்
தென்அமெரிக்கா – 3 நாடுகள் ஆப்பிரிக்கா – 1 நாடுகள்
ஐரோப்பா – 5 நாடுகள்

2019- ஆம் ஆண்டு ழு-20 மாநாட்டில் ஒசாகா பிரகடனம் (Osaka
Declaration) வெளியிடப்பட்டது (பொருளாதார சாவல்களை மேற்கொள்வதற்காக).

2023-இல் இந்தியாவில் ஜி-20 மாநாடு : வரும் 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி-20 மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக 2022-இல் இந்தியாவில் ஜி-20 மாநாடு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 2021-இல் இத்தாலியிலும், 2022-இல் இந்தோனேசியாவிலும், 2023-இல் இந்தியாவிலும், 2024-இல் பிரேசிலிலும் ஜி-20 மாநாடு நடத்தப்படும் என்று மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

Join us our Whatsapp Groups https://chat.whatsapp.com/H2mDPCvY9XlG3X3lxcQwRA
Join us our Telegram Groups : https://t.me/way2tips
Join us our Facebook Groups : https://www.facebook.com/way2tips.in/

#currentaffairs #currentinformation #gktoday #todaygk #way2tips

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *