Current Information

இந்தியா-இத்தாலி இடையே 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-இத்தாலி இடையே
15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்திய பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜிஸப் கான்ட்டி இடையே காணொலி வழியில் 6 நவம்பர் 2020 அன்று சந்திப்பு நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒப்பந்தங்களை அதிகரிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஐ.நா. சபை தீர்மானங்களுக்கு ஏற்ப மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரம், சட்டவிதிகள், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து பயங்கரவாதத்தை தடுக்கவும், அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவும் விரிவான அணுகுமுறையை கையாள இருவரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் இருதரப்புக்கும் பயனளிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இருவரும் கலந்து ஆலோசித்தனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 16-ஆவது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய மாநாடு வெற்றி பெறுவதற்கு நெருங்கி பணியாற்ற இருவரும் தீர்மானித்தனர். இருநாடுகளிலும் 2021,
2023-ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாடு பற்றியும் அவர்கள் ஆலோசித்தனர்.

இந்தச் சந்திப்பை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே எரிசக்தி, வர்த்தகம், படத் தயாரிப்பு, கப்பல் கட்டுமானம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த சந்திப்பில், பருவநிலை மாற்றம், உற்பத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க 4 ஆண்டு திட்டமும் வகுக்கப்பட்டது.

Join us our Whatsapp Groups https://chat.whatsapp.com/H2mDPCvY9XlG3X3lxcQwRA
Join us our Telegram Groups : https://t.me/way2tips
Join us our Facebook Groups : https://www.facebook.com/way2tips.in/

#currentaffairs #currentinformation #gktoday #todaygk #way2tips

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *