Current Information General Info

ஆர்மீனியா, அஜர்பைஜான் நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

ஆர்மீனியா, அஜர்பைஜான் நாடுகளுக்கிடையே
போர் நிறுத்த ஒப்பந்தம்
அண்மையில் ரஷ்யா முன்னிலையில் அஜர்பைஜானுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையே சர்ச்சைக்குரிய “நகோர்னோ-கராபக்” பிராந்தியம் தொடர்பான சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நகார்னோ-கராபக்கையொட்டிய சில பகுதிகளை விட்டுத்தர ஆர்மீனியா ஒப்புக்கொண்டது.
ஆர்மீனியப் பழங்குடியினரை பெரும்பான்மையாகக் கொண்ட நகோர்னோ-கராபக் பிராந்தியம், அஜர்பைஜானின் ஓர் அங்கமாக இருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அதன் பெரும்பான்மைப் பகுதி ஆர்மீனியா ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சர்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தைச் சுற்றி ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் தங்களது படைகளை குவித்துள்ளன. இதனால், அங்கு இருதரப்புக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 2020-இல் அந்தப் பிராந்தியத்தில் ஆர்மீனியா-அஜர்பைஜான் படையினருக்கு இடையே திடீரென மோதல் தொடங்கியது. இந்த நிலையில் ரஷ்யா முன்னிலையில் நவம்பர் 2020 நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

Join us our Whatsapp Groups https://chat.whatsapp.com/H2mDPCvY9XlG3X3lxcQwRA
Join us our Telegram Groups : https://t.me/way2tips
Join us our Facebook Groups : https://www.facebook.com/way2tips.in/

#currentaffairs #currentinformation #gktoday #todaygk #way2tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *