Current Information

அமெரிக்க அதிபர் தேர்தல்இந்திய அமெரிக்கர்கள் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தல்இந்திய அமெரிக்கர்கள் வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் இந்திய அமெரிக்கர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்க அதிபரை அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுக்கான தேர்தல் நவம்பர் 3, 2020 தேதி நடைபெற்றது. அதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்திய அமெரிக்கர்களுமான பிரமிளா ஜெயபால், ஏமி பெரா, ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் உறுப்பினர்களாக உள்ளனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லிபர்டேரியன் கட்சி வேட்பாளர் பிரி°டன் நெல்சனைத் தோற்கடித்தார். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய அமெரிக்கரான ரிதேஷ் டாண்டனை ரோ கன்னா தோற்கடித்தார்.

ரோ கன்னா தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதிநிதிகள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏமி பெரா தொடர்ந்து ஐந்தாவது முறையாக பிரதிநிதிகள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க செனட் அவைக்கான தேர்தலில் இந்திய அமெரிக்கரான ரிக் மேத்தா தோல்வியடைந்தார். நியூ ஜெர்ஸி மாகாணத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய செனட் அவை உறுப்பினருமான கோரி புக்கரிடம் தோல்வி கண்டார். நியூ ஜெர்ஸி மாகாண பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் இந்திய அமெரிக்கரும் வழக்குரைஞருமான ஜெனிஃபர் ராஜ்குமார் வெற்றி பெற்றார். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கியோவனி பெர்னாவை அவர் தோற்கடித்தார்.

அமெரிக்கத் தேர்தலில் வென்ற முதல் திருநங்கை
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக்பிரைட் அந்நாட்டின் செனட் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தின் செனட் அவை உறுப்பினராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹாரி° மெக்டோவல் கடந்த 44 ஆண்டுகளாக இருந்தார். எனினும், தேர்தலில் தொடர்ந்து போட்டியிட விரும்பவில்லை என்று அவர் அறிவித்தார். அதையடுத்து, தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் வழக்குரைஞரும் திருநங்கையுமான சாரா மெக்பிரைட் போட்டியிட்டார்.

அத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட °டீவ் வாஷிங்டனை அவர் தோற்கடித்தார். இதன் மூலம், அமெரிக்க செனட் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் திருநங்கை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். திருநங்கை சாரா மெக்பிரைட் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

Join us our Whatsapp Groups https://chat.whatsapp.com/H2mDPCvY9XlG3X3lxcQwRA
Join us our Telegram Groups : https://t.me/way2tips
Join us our Facebook Groups : https://www.facebook.com/way2tips.in/

#currentaffairs #currentinformation #gktoday #todaygk #way2tips

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *