Current Information General Info

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானம்

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானம்
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மொடேரா பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம்
Rs.800 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானம் திறக்கப்பட்ட பிறகு இதுவே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கமாக திகழும். தற்போது, ஆ°திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக திகழ்கிறது. குஜராத்தில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய மைதானத்திற்கு சர்தார் வல்லபாய் படேல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் 1,10,000 பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மைதானமானது கிரிக்கெட் மட்டும் அல்லாது பாட்மிண்டன், நீச்சல், தடகளம், குத்துச்சண்டை, கபடி, புல்தரை ஆடுகள டென்னி°, °குவா°, பில்லியர்ட்°, ஹாக்கி உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளுக்கும் பெரிய உந்துதலாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏனெனில் இந்த விளையாட்டுகளுக்கான அகாதெமிகளும் அந்த மைதானத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனித்துவமான அம்சமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் கொண்ட மாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Join us our Whatsapp Groups https://chat.whatsapp.com/H2mDPCvY9XlG3X3lxcQwRA
Join us our Telegram Groups : https://t.me/way2tips
Join us our Facebook Groups : https://www.facebook.com/way2tips.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *