Current Information

பூடானில் ரூபே அட்டை திட்டத்தின் இரண்டாம் கட்டம்

பூடானில் ரூபே அட்டை திட்டத்தின் இரண்டாம் கட்டம்
பூடான் மக்களின் இணையவழி பணப்பரிவத்தனையை எளிமைப்படுத்தும் நோக்கில், ரூபே அட்டை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும் அந்நாட்டுப் பிரதமர் லோதே ஷெரிங்கும் கூட்டாகத் தொடக்கி வைத்தனர். இத்திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் வாங்கும் பொருள்களுக்கு பூடான் மக்கள் பிஓஎ° (POS) இயந்திரம் மூலம் எளிதாக பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இந்தியாவில் உள்ள ஏடிஎம்-களையும் அவர்களால் பயன்படுத்த முடியும்.
ரூபே அட்டையின் இரண்டாம் கட்டத் திட்டத்தை பிரதமர் மோடியும் பூடான் பிரதமர் ஷெரிங்கும் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தனர். ரூபே அட்டை திட்டம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இத்திட்டத்தின் முதலாம் கட்டம் மூலமாக பூடானுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் அங்குள்ள ஏடிஎம்-களைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். அங்குள்ள கடைகளில் பிஓஎ° இயந்திரம் மூலம் பணப்பரிவர்த்தனையையும் மேற்கொள்ள முடியும்.
தற்போது தொடக்கி வைக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்டத் திட்டமானது பூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் பிஓஎ° இயந்திரம் மூலம் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வழிவகை செய்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரூபே அட்டை திட்டத்தின் முதல் கட்டத்தை இரு நாட்டுப் பிரதமர்களும் கடந்த ஆண்டு 2019 ஆக°ட் மாதத்தில் தொடக்கி வைத்தது நினைவுகூறத்தக்கது.

Join us our Whatsapp Groups https://chat.whatsapp.com/H2mDPCvY9XlG3X3lxcQwRA
Join us our Telegram Groups : https://t.me/way2tips
Join us our Facebook Groups : https://www.facebook.com/way2tips.in/

#currentaffairs #currentinformation #gktoday #todaygk #way2tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *