General Info

மதுரை ரயில்வே கோட்ட செய்தி வெளியீடு

மதுரை ரயில்வே கோட்ட செய்தி வெளியீடு:

திருநெல்வேலி – கங்கை கொண்டான் மற்றும் கோவில்பட்டி – கடம்பூர் ரயில்பாதை பிரிவுகளில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. வண்டி எண் 02627/02628 திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 28 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

2. பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27 வரை சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 02631 சென்னை – திருநெல்வேலி நெல்லை சிறப்பு ரயில் மதுரை – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

3. பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 28 வரை திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 02632 திருநெல்வேலி – சென்னை நெல்லை சிறப்பு ரயில் திருநெல்வேலி – மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து இயக்கப்படும்.

4. வண்டி எண் 06321/06322 நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல் நேர சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 28 வரை நாகர்கோவில் – மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

5. பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27 வரை பெங்களூரில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 07235 பெங்களூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் விருதுநகர் – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

6. பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 28 வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 07236 நாகர்கோவில் – பெங்களூர் சிறப்பு ரயில் நாகர்கோவில் – விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

7. பிப்ரவரி 26, 27, 28 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 02667 நாகர்கோவில் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் நாகர்கோவில் – மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

8. பிப்ரவரி 25, 26, 27 ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 02668 கோயம்புத்தூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் மதுரை – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

9. பிப்ரவரி 27 அன்று மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06236 மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில் மற்றும் பிப்ரவரி 28 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06235 தூத்துக்குடி – மைசூர் சிறப்பு ரயில் ஆகியவை மதுரை தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

10. பிப்ரவரி 25 அன்று மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06071 தாதர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் விருதுநகர் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

11. பிப்ரவரி 24, 25, 26, 28 ஆகிய நாட்களில் வண்டி எண் 06127 சென்னை எழும்பூர் குருவாயூர் சிறப்பு ரயில் அதன் வழக்கமான பாதையான விருதுநகர், வாஞ்சி மணியாச்சி திருநெல்வேலிக்கு பதிலாக விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி பாதையில் இயக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *