05-02-2026
காக்னிசன்ட், 2026ல் சுமார் 25,000 ஃபிரஷர்களை வேலைக்கு அமர்த்த திட்டம்
ஐடி நிறுவனமான காக்னிசண்ட், 2026ல் சுமார் 24,000-25,000 ஃபிரஷர்களை
வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. “2025ம் ஆண்டில் நாங்கள் 20,000
பள்ளி பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளோம் … அடுத்த
ஆண்டு, இதை சுமார் 20% அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று தலைமை
நிதி அதிகாரி ஜதின் தலால் கூறினார். 2025ம் ஆண்டில் காக்னிசண்ட் மொத்தம்
சுமார் 14,800 ஊழியர்களை பணிக்கு அமர்த்தியது.
